vagam comics list (வகம் காமிக்ஸ் லிஸ்ட்)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது முதலைப்பட்டாளத்தில் பதிவு போடுகிறேன்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு, அதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால், இதில் தலைகாட்ட முடியவில்லை! எப்போதாவது இதிலும் தலைகாட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை இங்கு பதிவு செய்கிறேன்! பொதுவாக, ஏதாவது பதிவை போட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்பது எனது விருப்பமல்ல! நாம் பகிரும் பதிவு நாலு பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு முப்பத்தியாறு புத்தகங்கள் வெளிவந்து விட்டது! அதனுடைய வரிசைப்பட்டியலை இங்கு கொடுத்தால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன்! படித்து (பார்த்து) விட்டு உங்கள் எண்ணங்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்! நன்றி!
1. மரண
ஒப்பந்தம்
பல வருங்களுக்கு முன்பு வேறு நிறுவனத்தில் வெளிவந்த கதையிது,
இந்தக் கதையுடன் வெளிவராத ஒரு பத்து பக்க புதுக் கதையையும் சேர்த்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது! நிறைய uncut pages இருக்கும். கதைகளை கத்திரி போடாமல் அப்படியே சுவை மாறாமல் கொடுக்க்கப்பட்டுள்ளது.
முழு வண்ணம் + பக்கம் - 64 + விலை – 250/- 2022
மாதம் – ஜூலை
2. சிஸ்கோ
கிட் ஸ்பெஷல் – 1
இதில் மூன்று சிஸ்கோ கிட் கதைகள் வெளிவந்துள்ளது!
மேதாவி திருடன் மற்றும் சுரங்க மோசடி ஆகிய இரண்டு புதிய கதைகளும், மாலைமதி & முத்து காமிக்ஸில் வெளிவந்த அப்பாவி திருடன் கதை மட்டும் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள
கதை.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 134 + விலை – 225/- + அக்டோபர் 2022
3. தீபாவளி
மலர் – 2022
இதில் ஐந்து அதிரடிச் சித்திரக்கதைகள் இடம்பெற்றுள்ளன.
1.யார் அந்த கொலையாளி – ராஸ் ஹார்பர்
2. மரண நகரம் – கிளென்ஸி & மன்ப்ரெட்
3. திட்டமிடப்பட்ட கொலைகள் – காஷ் ப்ளெய்னி
4. பெருச்சாளி வேட்டை – சார்ஜெண்ட் கிரெக்
5. அதிரடிப்படை – கேப்டன் மோர்கன்
கருப்பு & வெள்ளை + பக்கம் – 280 + விலை – 475/- + நவம்பர் 2022
4. கொலைக்கு
ஒரு விலை
வெகுமதி வேட்டையன் ஜானின் சாகஸங்கள். இடம்பெற்ற பாக்கெட் சைஸ் புத்தகம். இப்புத்தகம் தீபாவளி மலருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகம்! .கருப்பு & வெள்ளை + பக்கம் – 50 + விலை – 40/- + நவம்பர் 2022
5. ஹைஜாக்
கடத்தல்காரர்களிடமிருந்து பயணக்கைதிகளை விடுவிக்கும் ஆக்ஷன் கதை, புதிய ஹீரோக்களான ஸ்மித்
& ஜோன்ஸ், இத்துடன் கிளென்ஸி & மன் ப்ரெட் ஒரு சிறுகதையும், மற்றும் வெகுமதி வேட்டையன்
ஜானின் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 64 + விலை – 120/- + டிசம்பர் 2022
6. செவ்விந்திய பூமி
ஏகே 67 மர்மம் & செவ்விந்திய பூமி ஆகிய இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு கதைகளுமே இலங்கையைச் சேர்ந்த காமிக்ஸ் வாசகர்.எஸ். வினோபா அவர்களும் அவருடைய ஆசிரியரான இ.சு.முரளிதரன் சேர்ந்து உருவாக்கியது. முதலாவது கதை துப்பறியும் பாணியிலும் இரண்டாவது கதையான செவ்விந்திய பூமி கெளபாய் கதையாகவும் உருவாக்கியுள்ளனர்.
( இந்தக் கதை தற்போது அவுட் ஆப் ஸ்டாக் ஆகியும் உள்ளது)
கருப்பு & வெள்ளை + பக்கம் – 48 + விலை – 80/- + டிசம்பர் 2022
7. சிஸ்கோ
கிட் ஸ்பெஷல் – 2
இதில் மூன்று சிஸ்கோ கிட் கதைகள் வெளிவந்துள்ளன!
ஆயுதக் கடத்தல் மற்றும் பொய்யன் ஆகிய இரண்டு புதிய கதைகளும்,
ரயில் கொள்ளை மட்டும் பல வருடங்களுக்கு முன்பு முத்து & ராணி காமிக்ஸில் வெளிவந்துள்ள
கதை.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 136 + விலை – 250/- + ஜனவரி 2023
8. சீன
நிழல்
போனெலி நிறுவனத்தைச் சார்ந்த இரண்டு கதைகள் வெளிவந்துள்ளன!
சீன நிழல் - நிக் ரைடர் ( நியூயார்க்கின் துப்பறிவாளர் ) புதிர்தேசம் மெக்ஸிகோ – ரெய்ஸ்
என்கிற புதிய நாயகர். முதலாவது கதை முழுக்க முழுக்க துப்பறியும் பாணிக்கதை, இரண்டாவது
கதை முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் பழிவாங்கும் பாணிக்கதை. கொஞ்சம் சயின்ஸ் பிக்ஷனோடு நகரும் கதை.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 208 + விலை – 250/- + பிப்ரவரி 2023
9. சிஸ்கோ
கிட் ஸ்பெஷல் – 3
இதில் மூன்று சிஸ்கோ கிட் கதைகள் வெளிவந்துள்ளன!
கால்நடை திருடர்கள் மற்றும் பழிக்குப் பழி ஆகிய இரண்டு புதிய
கதைகளும், இரத்த வெறியர்கள் கதை மட்டும் பல வருடங்களுக்கு முன்பு முத்து காமிக்ஸ் நிறுவனத்தில்
வெளிவந்துள்ள கதை.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 136 + விலை – 250/- + மார்ச் 2023
10. ஏஞ்சலா
போனெலி நிறுவனத்தைச் சார்ந்த ஒன்ஷாட் கதை. வித்தியாசமான வன்மேற்கு
கதையிது. பொதுவாக வன்மேற்கு கதைகள் என்றால் அதிரடியாக மட்டும் இருக்கும்! இதில் சற்று
மாறுபட்டு அதிரடியோடும் குடும்பப் பின்னணியோடும் ஒரு இயல்பான வன்மேற்கு களத்தை காட்சிப்படுத்தியுள்ளனர். .
கருப்பு & வெள்ளை + பக்கம் – 114 + விலை – 150/- + ஏப்ரல் 2023
11. எல்லையில்
ஒரு எத்தன்
இதுவும் போனெலி நிறுவனத்தைச் சார்ந்த ஒன்ஷாட் கதை. வித்தியாசமான
அதிரடிக் கதையிது. பொதுவாக ஜேம்ஸ்பாண்ட் என்றாலே எல்லோருக்கும் தெரியும். அவரை ரோல்
மாடலாக வைத்து இந்த முகிகோ என்கிற ரஷ்ய ஜேம்ஸ்பாண்ட்டாக உருவாக்கியுள்ளனர். ரொமான்ஸ், ஆக்சன் என இந்திய பர்மா எல்லையில் நடைபெறும்.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 114 + விலை – 150/- + மே 2023
12. சிஸ்கோ
கிட் ஸ்பெஷல் – 4
இதில் மூன்று சிஸ்கோ கிட் கதைகள் வெளிவந்துள்ளன!
வங்கிக் கொள்ளையர்கள் மற்றும் திசைமாறிய திருடர்கள் ஆகிய
இரண்டு புதிய கதைகளும், கொலைகார கோமாளி கதை மட்டும் பல வருடங்களுக்கு முன்பு மாலைமதி & திகில் காமிக்ஸில் வெளிவந்துள்ளது.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 136 + விலை – 250/- + ஜூன் 2023
13. அபாய நகரம்
இதிலும் போனெலி நிறுவனத்தைச் சார்ந்த இரண்டு கதைகள் வெளிவந்துள்ளன!
சீன நிழலுக்குப் பிறகு வெளிவந்துள்ள நிக் ரைடரின் துப்பறியும் ஆக்ஷன் கதை. மற்றும்
புகை பிடிக்காதீர் – ஏஞ்சி என்கிற புதிய நாயகர். முதலாவது கதை முழுக்க முழுக்க துப்பறியும்
ஆக்ஷன் பாணிக்கதை என்றால், இரண்டாவது கதை ரொம்ப வித்தியாசமான சற்று மாறுபட்ட கதைக்களம். லீ
ஸ்டோரி கதை வரிசையில் டாப் ஐந்தில் இடம்பெற்றுள்ள கதை! வகம் காமிக்ஸின் முதலாம் ஆண்டு
மலராக இந்தக் கதைகளை வெளியிடப்பட்டுள்ளது.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 210 + விலை – 275/- + ஆகஸ்ட் 2023
14. யார் இந்த டயபாலிக்?
பொதுவாகவே டயபாலிக் கதைகளை நிறைய பேர் வாசித்திருப்பார்கள்.
ஆனால், அவர் யார்? அவர் பின்னணி என்ன? எதனால் கொள்ளைக்காரனாக மாறினார், அவருடைய முழு பின்னணி என்ன? என்பது பற்றியெல்லாம் இந்தக் கதையில் சுவாரஸ்யமாக சொல்லியுள்ளனர், யாரும் இதுவரை வாசித்திருக்காத புதிய கதைக்களம்!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 126 + விலை – 150/- + ஆகஸ்ட் 2023
15. ஏகே
67 மர்மம்
இது ஏற்கனவே வகம்
காமிக்ஸில் அவுட் ஆப் ஸ்டாக் ஆன கதை. புத்தக கண்காட்சிக்கு வரும் மாணவர்களுக்காக, சின்ன
சைஸில், குறைந்த பிரதிகளில், குறைந்த விலையில், மறுஆக்கம் செய்யப்பட்ட புத்தகம். கூடுதலாக
மாணவர்களைக் கவருவதற்காக புதிர்ப்போட்டி, ஓவியப் பகுதியெல்லாம் புதிதாக இதில் இணைக்கப்பட்டுள்ளது.
கருப்பு & வெள்ளை
+ பக்கம் – 48 + விலை – 60/- + செப்டம்பர் 2023
16. மிருக
மனிதர்கள்
இதுவும் போனெலி நிறுவனத்தைச் சார்ந்த ஒன்ஷாட் கதை. வித்தியாசமான அதிரடிக் கதையிது. ராணுவ பரிசோதனைக் கூடத்தில் நிகழும் தவறால் மனிதர்கள் மிருகங்களாக மாறி விடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எதனால் பாதிக்கப்படுகிறார்கள் அவர்கள் அதிலிருந்து மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதைப் பற்றி விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கும் கதை
கருப்பு & வெள்ளை + பக்கம் – 114 + விலை – 150/- + அக்டோபர் 2023
17. MYSTERY
OF AK 67 (ENGLISH)
இது ஏற்கனவே வகம் காமிக்ஸில் அவுட் ஆப் ஸ்டாக் ஆன ஏகே 67 மர்மம் கதையின் ஆங்கில வெர்சன். இதுவும் புத்தக கண்காட்சிக்கு வரும் மாணவர்களுக்காக சின்ன சைஸில், குறைந்த பிரதிகளில், குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட புத்தகம். கூடுதலாக மாணவர்களைக் கவருவதற்காக நான்கு பக்க சிறுகதை மற்றும் புதிர்ப்போட்டி, ஓவியப் பகுதியெல்லாம் புதிதாக இதில் இணைக்கப்பட்டுள்ளது.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 48 + விலை – 60/- டிசம்பர் 2023
18. மோசடி நகரம் – சிஸ்கோ கிட் சாகஸம்
மூன்று சிஸ்கோ கிட் கதைகள் விற்பனையில் சற்று மந்தமானதால்,
சிறிய சைஸில், குறைந்த விலையில், தனித்தடமாக
வெளியிடப்பட்டுள்ள முதல் சிஸ்கோ கிட்டின் புத்தம் புதிய சித்திரக்கதை, இதுவரை தமிழில் வெளிவராத கதை!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 50 + விலை – 80/- + அக்டோபர் 2023
19. தீபாவளி மலர் - 2023
போனெலி நிறுவனத்தைச் சார்ந்த மூன்று கதைகள் இதில் இடம்பெற்றுள்ளது!
நிக் ரைடரின் இரண்டு கதைகளும்( ஆறாத வடுக்கள் 1& 2) மற்றும் ஜூலியாவின் கதையான இரத்த ஒப்பந்தம் என்கிற கதையும்
சேர்ந்து. மூன்று கதையாக வெளிவந்துள்ளது. நிக் ரைடரின் ஆரிஜின் ஸ்டோரி, அவருடைய பூர்வீகத்தைப் பற்றியும் அவருடைய குடும்பத்தாரின் (வரலாறுகளை) கதையைப் பற்றியும் விரிவாக பேசும் கதை. இதுவரை வெளியிடப்பட்டுள்ள நிக் ரைடர் கதைகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. மற்றும் ஜூலியாவின் இரத்த ஒப்பந்தம் கதை.
போலீஸ்துறையில் நடைபெறும் ஆடுபுலி ஆட்டத்தை பற்றிப் பேசும் வித்தியாசமான கதை.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 322 + விலை – 450/- + நவம்பர் 2023
20. மேதாவி திருடன் – சிஸ்கோ கிட் சாகஸம்
இது ஏற்கனவே பெரிய சைஸில் சிஸ்கோ ஸ்பெஷல் - 1 இல், வெளிவந்த கதையிது! விலை குறைவிற்காகவும், புத்தகக் கண்காட்சிக்காகவும் மீண்டும் சிறிய சைஸில், குறைந்த விலையில், மறுஆக்கம் செய்யப்பட்ட கதை!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 50 + விலை – 80/- + நவம்பர் 2023
21. விதியோடு விளையாடு - டயபாலிக் சாகஸம்சிறிய சைஸில் வெளிவரும் சிஸ்கோ கிட்டின் மூன்றாவது புத்தகம்! இதுவரை வெளிவந்த சிஸ்கோ கிட் கதைகளைலேயே வித்தியாசமாகவும், அதிரடியாகவும் உள்ள கதை! இதுவரை தமிழில் வெளிவராத கதை!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 50 + விலை – 80/- + ஜனவரி 2024
24. டிடெக்டிவ் ஜெட் ஸ்பெஷல்!
80 களில் மிஸ்டர் ஜெட் என்ற தலைப்பில் லயன் நிறுவனத்தில் வெளிவந்த ஒரு கதையின் மூலமாக டிடெக்டிவ் ஜெட் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். டிடெக்டிவ் ஜெட் கதைகளை பிரிட்டிஷ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள ஆறு கதைகளையும் ஒரே தொகுப்பாக இந்த இதழில் கொடுத்துள்ளோம். பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கும் ஏற்ற கதையாக உள்ள கதை. ஆறு கதைகளுமே வித்தியாசமான ஆக்ஷன் அதகளம்தான். டயபாலிக், சிஸ்கோ கிட், நிக் ரைடர் போன்று இவருக்கும் அமோக வரவேற்பை வழங்கியுள்ளனர் தமிழ் காமிக்ஸ் வாசகர்கள்.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 154 + விலை – 330/- + ஜனவரி- 2024
25. சைனா மேன்
மரண ஒப்பந்தம் கதைக்குப் பிறகு முழுவண்ணத்தில் வெளிவந்துள்ள சித்திரக்கதை. இதில் இரண்டு சைனாமேன் சாகசக் கதைகள் இடம்பெற்றுள்ளன. 350 ரூபாய் விலையில், 96 பக்கங்கள் ஆர்ட் பேப்பரில் வெளிவந்துள்ளது. காதல், நட்பு, ரிவேஞ்ச் ஆக்ஷன் என்று பயணிக்கும் கதை, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள கதை.
முழுவண்ணம் + பக்கம் – 98 + விலை – 350/- + ஏப்ரல்- 2024
26. கிளாசிக் ஸ்பெஷல் - 2
சைனாமேனுக்குப் பிறகு வெளிவர இருந்த புத்தகம். இந்த கிளாசிக் ஸ்பெஷல். சைனாமேன் மொழிபெயர்ப்பில் சற்று கூடுதல் வேலை வாங்கியதால் இவர் முந்திக் கொண்டார். நான்கு அதிரடி கதாநாயகர்கள் ( ஹியூக் மார்ஸ்டன், லூக் ஜார்விஸ், கிளென்ஸி & மன்ப்ரெட், வெகுமதி வேட்டையன் ஜான்) கதைகளுடன் வெளிவந்துள்ள அதிரடி புத்தகம்!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 114 + விலை – 210/- + மார்ச்- 2024
27. சிஸ்கோ கிட் ஸ்பெஷல் - 5
ஜனவரிக்குப் பிறகு வெளிவந்துள்ள சிஸ்கோ கிட் கதை! இதில் இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. பேய்க்குதிரை வீரன் என்கிற கதை பல வருடங்களுக்கு முன்பு, முத்து நிறுவனத்தில் வெளியிடப்பட்ட கதை. இரண்டாவது கதையான தங்க சுரங்கம் இதுவரை வெளிவராத புதிய கதை!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 98 + விலை – 160/- + மே- 2024
28. சிவப்பு வேதாளம்
நிக் ரைடரின் ஐந்தாவது புத்தகமாக வெளிவந்துள்ள புத்தகம். தலை வெட்டப்பட்ட ஒரு முண்டத்தை வைத்து, இறந்தது ஆணா? பெண்ணா? எதற்காக நடந்த கொலை, அதன் பின்னணி என்ன என்பதை துப்பறிகிறார்கள், நிக் ரைடர் & மார்வின் ஜோடிகள், வழக்கமான விறுவிறுப்பாக செல்லக்கூடிய ஆக்ஷன் துப்பறியும் கதை.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 98 + விலை – 140/- + மே - 2024
29. துணையாய் ஒரு துரோகி
வெகுமதி வேட்டையான் ஜானின் ஆறு அதிரடி சித்திரக்கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களுக்காக குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட ஒரு நிறைவான பாக்கெட் சைஸ் புத்தகம்
கருப்பு & வெள்ளை + பக்கம் – 66 + விலை – 50/- + ஜூன்- 2024
30. வைரக் கடத்தல் மர்மம்!
மூன்றாவதாக வெளிவந்துள்ள டயபாலிக் புத்தகம் இது! மேத்யூ என்கிற மனிதர் தன் பிள்ளைகளுடன் அமைதியாக வசித்து வரும் போது, எதிரிகளால் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதைத் தீர்ப்பதற்காக டயபாலிக்கின் உதவியை நாடுகிறார். அதன் பிறகு நடைபெறும் விறுவிறுப்பான ஆக்ஷன் கதை.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 126 + விலை – 160/- + ஜூன்- 2024
31.ஹிட்லர் உயிரோடு!
தமிழில் முதன்முறையாக காமிக்ஸ் வடிவில் வெளிவந்திருக்கும் முதல் பிக்ஷன் ஹிட்லர் கதை, 1945 இல் ஹிட்லர் இறந்து விட்டதாக வரலாறுகள் சொல்லப்படுகின்றன. ஆனால், இந்தக் கதையில் பலத்த காயத்தோடு உயிரோடு இருப்பதாகவும், அவரைக் கொல்ல முற்படும் ஒரு வீரனைப் பற்றிய அதிரடிக்கதையாக கொடுத்துள்ளனர், மேலும், இதில் அதிரடிப்படை, கிளென்ஸி& மன்ப்ரெட் மற்றும் வெகுமதி வேட்டையன் ஜானின் மூன்று சிறு கதைகள் சேர்த்து ஆறு கதைகள் இடம்பெற்றுள்ளன!
வகம் காமிக்ஸின் இரண்டாம் ஆண்டு மலராக இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளன!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 136 + விலை – 250/- + ஜூலை 2024
33. மரணப்பிடியில் ஈவா!
நான்காவதாக வெளிவந்துள்ள டயபாலிக் புத்தகம் இது! ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கிக் கொள்கிறார் ஒரு இளம்பெண். அவர் யார்? அதன் பிறகு நடைபெறும் பரபரப்பான த்ரில்லர். முதன்முறையாக இந்த புத்தகத்திற்கு இரு விதமான அட்டைப் படங்களுடன் வெளிவந்துள்ளன!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 124 + விலை – 160/- + ஆகஸ்ட்- 2024
34. மர்மக் கொலைகாரன்!
கிளென்ஸி & மன்ப்ரெட் ஆகிய இரு துப்பறிவாளர்களின் நான்கு சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். பாக்கெட் சைஸில் வெளிவந்துள்ள ஒரு நிறைவான புத்தகம் (கிளென்ஸி & மன்ப்ரெட் நாயகர்களின் கடைசிக் கதையிது)
கருப்பு & வெள்ளை + பக்கம் – 66 + விலை – 50/- + ஆகஸ்ட்- 2024
35. நிழல் யுத்தம்!
நிக் ரைடரின் ஆறாவது புத்தகமாக வெளிவந்துள்ள புத்தகம். இரு மாபியா கேங்குகளில் நடைபெறும் பிரச்சனைகள், கொலைகளைப் பற்றி துப்பறியும் விறுவிறுப்பான ஆக்ஷன் கதை.
கருப்பு & வெள்ளை + பக்கம் – 98 + விலை – 140/- + செப்டம்பர் - 2024
36. சிஸ்கோ கிட் ஸ்பெஷல் - 6
மே மாதத்திற்குப் பிறகு வெளிவந்துள்ள சிஸ்கோ கிட் கதை! இதில் இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. பேய்க்குதிரை வீரன் என்கிற கதை பல வருடங்களுக்கு முன்பு, முத்து நிறுவனத்தில் வெளியிடப்பட்ட கதை. இரண்டாவது கதையான தங்க சுரங்கம் இதுவரை வெளிவராத புதிய கதை!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 98 + விலை – 160/- + செப்டம்பர்- 2024
37. த்ரில்லர் தீபாவளி ஸ்பெஷல் – 2024
இதில் மூன்று த்ரில்லர் சித்திரக்கதைகள் இடம்பெற்றுள்ளன.
1. ஆல்பிக்கொரு ஆபத்து – நிக் ரைடர் (ரிவேஞ்ச் த்ரில்லர்)
2. யார் செய்த கொலை - ஜூலியா (சைக்கோ த்ரில்லர்)
3. கல்லறைத் தீவு - கிராபிக் நாவல்(அட்வெஞ்சர், அமானுஷ்ய த்ரில்லர்)
முதல்முறையாக ஹாட்கேஸில் வெளிவந்துள்ள புத்தகம். இதில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளுமே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது!
கருப்பு & வெள்ளை + பக்கம் – 338 + விலை – 500/- + அக்டோபர் 2024
வகம் காமிக்ஸில் வெளிவரும் அனைத்து கதைகளும் தொடர்ந்து இந்தப் பக்கத்தில் அப்டேட் செய்யப்படும். இந்தப் பதிவைப் பற்றிய கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்! நன்றி நண்பர்களே.
என்றும் அன்புடன்
அ.கலீல்
டேஞ்சர் டயபாலிக் - இக்கதை வகத்தில் வெளிவரும் வாய்ப்பிருக்கிறதா?
ReplyDeleteவாய்ப்பில்லை
DeleteMt Jet
ReplyDeleteகலர் அ க/வெ ??
கலர் என்றால் விலை சரியானதுதான் ஆனால் க/வெ எனில் விலை சற்று அதிகமாக இருப்பதாய் மனதிற்கு பட்டது
கருப்பு வெள்ளைதான். மிஸ்டர் ஜெட் மட்டும் வரவில்லை அதனுடன் ஒரு தவளையைத் தேடி கதையும் அதனுடன் இரண்டு சிறுகதையும் வருகிறது.
Deleteஜெட் அசத்தல் ரகம் கலக்குது வகம்
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteகாடு, மலைகள் இயற்கைவருமாறு ஏதும்கதைகள்
ReplyDeleteபோடுங்க அண்ணா
விரைவில் வெளியிடலாம் சகோ
Deleteடயபாலிக் ஆவலோடு..
ReplyDeleteமகிழ்ச்சி நண்பரே
DeleteDewali மலர் வந்து விட்டதா ஜி
ReplyDeleteஅடுத்த வாரம் புதன் அல்லது வியாழன் வந்துவிடும் ஜி
DeleteWelcome back "முதலைபட்டாளம்"😍😘💐💐Kaleel ji..😘
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஇதுவரை வந்த வகம் வெளியீடுகள் பட்டியலுக்கு நன்றிகள் கலீல் ஜி..😃😍👍
ReplyDeleteபார்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே 😘
DeleteEagerly waiting for Mr.Zed..😍😃
ReplyDeleteIs it pocket size ji?..😘
மகிழ்ச்சி நண்பரே! இல்லை நண்பரே பெரிய சைஸ்தான்
Deleteகடைசியாக வந்த சிஸ்கோ சிங்கிள் ஆல்பம் புத்தகம் தயாரிப்பு தரம் அருமையாக இருந்தது . படிப்பதற்கு ஏதுவான சைஸ் மற்றும் விலை. மாதம் மாதம் இது போல ஒரு புத்தகத்தை இந்த விலையில் போட்டு விடலாம். தற்போது இதுபோல படிப்பதற்கு ஏதுவாக உள்ள புத்தகங்களை தான் உடனே படித்து முடித்து விடுகிறேன்.
ReplyDeleteநன்றி சார். இனி வரும் சிஸ்கோ கதைகள் இது போன்றே வெளிவரும்!
DeleteNic raider கதைகளை கூட இது போல விலையில் ,சைஸ்சில் வெளியிடுங்கள் நன்றாக இருக்கும்.
ReplyDeleteவரும் வருடம் .
Mr. ஜெட், நிக் Raider, diobolik, ஜூலியா சிஸ்கோ மேலும் என்ன புதிய ஹீரோக்கள் வர காத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா.
காத்திருந்து பார்ப்பதும் படிப்பதும் தனிசுகம் தான் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நீங்களே தெரிந்து கொள்வீர்கள்
Deleteஅதுபோல இரும்பு மனிதன் ஆர்ச்சி நமது வகம் காமிக்ஸ்யில் கொண்டு வருவது சாத்தியமா. Jeslong கூட சாத்தியமா என்று உங்களிடம் கேட்டு இருக்கிறேன்.
ReplyDeleteஆர்ச்சி வருவது சாத்தியக்குறைவுதான் ஜெஸ்லாங் வேண்டுமானால் ட்ரை பண்ணி பார்க்கலாம்
Deleteபோனோலி நிறுவனத்தில் டெக்ஸ் நிக் ரைடர், zagor இவர்களை தவிர நெடுந்தொடர் கொண்ட தரமான ஹீரோஸ் இருந்தால் அறிமுகப்படுத்துங்கள். வதம் காமிக்ஸ் நிறுவனத்திலும் ஒரு தரமான எப்போதும் ஜெயிக்கும் குதிரை இருக்க வேண்டும்.
ReplyDeleteஅப்படி ஹீரோவை தேடிக் கொண்டுதான் இருக்கேன். விரைவில் பிடிச்சிடலாம்
Deleteஅருமை. வகம் 20 இருநூறு ஆகவும் விற்பனையில் சாதிக்கவும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
DeleteSir, kindly give ur wats app number, I have already sent email , ur blog was great , kindly reply to my email, evergreen comics memories, thanks for ur effort sir
Deleteவகை வகையான வகம்'மின் Sweet 22 க்கு வாழ்த்துகள், கலீல்.
ReplyDeleteநன்றி தோழர்
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவ
Deleteவணக்கம் நண்பரே
Sir, I want some books , check ur email and reply sir, I appreciate ur effort and interest in comics, I also love comics, 90's nostalgia
ReplyDeleteThank you sir
Deleteகலீல் அவர்களே, மிகவும் நன்றி. முதலை பட்ட்டாளம் blog உங்களுடையது என்று இன்று தான் தெரிந்தது. இந்த புத்தக வரிசை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் என்னுடைய காமிக் excel update செய்ய வசதியாக உள்ளது. நன்றி
ReplyDeleteKaleel Sir, latest book list vendum - Where can i see that?
ReplyDeleteGood
ReplyDelete